இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழகத்தில் கப்பலில் நிவாரணப் பொருட்கள் !!

 
ஸ்டாலின்


இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக நிவாரண பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-க்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரம் சென்றது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகிறது.

இலங்கை

இந்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் உள்ள  மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 14 ஆயிரத்து 700  டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள்  உள்ளிட்ட 67.7கோடி மதிப்பில் நிவாரண பொருட்க  தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து VTC SUN என்ற  சரக்கு கப்பல் மூலம் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கப்பலை உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடார சட்டமன்ற உறுப்பினர்கள்  சண்முகையா, மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web