அதிர்ச்சி!! மருத்துவ கல்லூரி மாணவிகள் 8 பேருக்கு கொரோனா!! பெற்றோர்களே உஷார்!!!

 
கல்லூரி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, இரு தினங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,448 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,802 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடப்பணிகள் தொடங்காததால் முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடப்பாண்டில் தொடங்கி உள்ளது. அதில் 50 மாணவா்கள் அனுமதித்த நிலையில், 37 போ் மட்டுமே தற்போது சோ்ந்துள்ளனா். 

எய்ம்ஸ்

இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த முடிவுகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதித்த மாணவர்கள் வீடுகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அந்த இடங்களில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். 

கொரோனா

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அஜித்குமாா் கூறிகையில், எய்ம்ஸ் மாணவா்கள் 8 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்று கூறினார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 386 போ் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளில் கடைபிடிக்காமல் இருந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web