அதிர்ச்சி!! வாட்சுக்கு பதில் வறட்டி!! சிக்கலில் பிளிப்கார்ட்!!

 
வறட்டி

தற்போதைய வாழ்க்கை முறையில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதற்காக அமேசான், பிளிப்கார்ட் தொடங்கி அனைத்து வலைதளங்களும் போட்டா போட்டி பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யும் போது அதற்கு மாற்றாக வேறு ஒரு பொருள் டெலிவரி செய்யப்படுவது சமூக நாட்களாக அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

அமேசான், ஃபிளிப்கார்ட் இந்தியாவில் செயல்பட தடையா? SJM சொல்வது என்ன?

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தில் வசித்து வருபவர் நீலம் யாதவ். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை ஆர்டர் செய்தார். அதனை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் ஆர்டர் செய்த நிலையில், 9 நாட்கள் கழித்து கடந்த 7ம் தேதி டெலிவரி செய்யப்பட்டது.

நீலம் தனது சகோதரரான ரவேந்திராவுக்கு பரிசளிப்பதற்காக அந்த வாட்சை ஆர்டர் செய்திருந்தார். அப்போது டெலிவரி செய்யப்பட்ட வாட்சை ரவேந்தர் பார்ப்பதற்காக ஆர்வமாக பார்சலை பிரித்தார். அப்போது அதில் வாட்சுக்கு பதிலாக  மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட 4 வறட்டிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பிளிப்கார்ட்

அதன் பின்னர் அதனை டெலிவரி செய்த ஊழியரை அழைத்து அந்த பொருளை ரிட்டர்ன் செய்து தான் கொடுத்த பணத்தையும் திரும்பப் பெற்றார். சமீப காலமாகவே பிளிப்கார்ட்டில் இதுபோன்ற கோளாறுகளால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web