அதிர்ச்சி!! இந்தியாவின் முதல் ”குரங்கு அம்மை” பதிவு!! தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்!!

 
குரங்கு அம்மை

 

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தற்போது இந்தியாவில் காலடி எடுத்து¬ வத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் 58 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

குரங்கு அம்மை

குரங்கு அம்மையின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்குள் உடலின் பல பகுதிகளில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு பின்னர் அவை கொப்புளங்களாக மாறும் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரம் பேரில் 85 சதவீதம் பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குரங்கு அம்மை தொற்று இந்தியாவில் இதுவரை ஏற்படவில்லை என்ற நிலை தற்போது மாறிவிடும் போல் இருக்கிறது.

குரங்கு அம்மை

அதன்படி உடலில் சொறி மற்றும் கொப்புளங்களுடன் இளைஞர் ஒருவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்களின் கூற்றுப்படி இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. எனவே அவரின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே இளைஞருக்கு எந்த வித பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கொரோனா தொற்றில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது புதிதாக குரங்கு அம்மைத் தொற்று அனைவரையும் பீதியடையச் செய்துள்ளது. நோய் தடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web