அதிர்ச்சி!! கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை!!

 
குரங்கு அம்மை

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

குரங்கு வைரஸ்

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958-ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970-ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. 

குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன.

குரங்கு அம்மை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் கடுமையான நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நபருக்கு சுகாதரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அந்த நபரின் மாதிரி முடிவுகள் புனே வைராலஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைபடுத்திக்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web