அதிர்ச்சி!! ஒரே நாளில் 18000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!!

 
கொரோனா

இந்தியாவில் கடந்த 7 வாரங்களுக்கும்  மேலாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருந்து வருகிறது. இடைபட்ட சில நாட்களின் தினசரி தொற்று குறைந்து வந்தது. பின்னர் மீண்டும் கொரோனா தொற்று உச்சத்தை நோக்கி செல்வதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதன் மூலம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நோய் தொற்றால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

கொரோனா
இந்நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 16,159 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் இதன் எண்ணிக்கை 18,930 ஆக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,59,239 ஆக பதிவாகி உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


மேலும் கடந்த ஒரே நாளில் 35 பேர் கொரோனா நோய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,25,305 ஆக பதிவாகி உள்ளது. 14,650 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,29,21,977 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி 1,15,212 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் இதன் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்து விடும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் இதுவரை 1,98,33,18,772 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும்  நேற்று ஒரே நாளில் 11,44,489 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web