அதிர்ச்சி! தமிழகத்தில் 6,50,000 பேர் பொதுத்தேர்வை எழுதவில்லை! ஜூலையில் துணைத்தேர்வை எழுத வைக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

 
தேர்வு

இந்த கொரோனா ஊரடங்கு காலம், உலகம் முழுக்கவே மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. வாழ்க்கையில் 10ம் வகுப்பு வரையில், ஆசிரியர்கள்  மாணவர்களிடம், ’உங்கள் வாழ்க்கையில் திருப்பதைத் தருவது 10ம் வகுப்பு தேர்வு’ என சொல்லி தயார்படுத்துவார்கள். இந்நிலையில், சுமார் 6.5 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த அதிர்ச்சி தகவலை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் தொடங்கப்பட்ட 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 31ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் தேர்ச்சியின்றி ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் நேரடி பொதுத்தேர்வினை மாணவர்கள் எழுதி உள்ளனர்.

தேர்வு

இது குறித்த பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வை 1 லட்சத்து 95 ஆயிரத்து 292 மாணவர்கள் எழுதவில்லை. மேலும் பிளஸ்1 பொதுத்தேர்வை 2 லட்சத்து 58 ஆயிரத்து 641 மாணவர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 லட்சத்து 25 ஆயிரத்து 534 மாணவர்களும் எழுதவில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 6.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்கள் என்று பள்ளிகல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5 லட்ச மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிகல்வித்துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

அதில் பொதுத்தேர்வுகள் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளநிலையில், அதைத் தொடர்ந்து தேர்வு எழுதத் தவறிய 6.5 லட்சம் மாணவர்களையும் வருகிற ஜூலை மாதத்தில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வுகளில் பங்கேற்க செய்யும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web