அதிர்ச்சி! 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்! தெரிஞ்ச டிரைவரால் நேர்ந்த துயரம்!

 
குற்றவாளி

9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, அந்த பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர், பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரிந்த ஆட்டோ டிரைவரே இப்படி செய்தது அந்த பகுதி மக்களைக் கொந்தளிக்க செய்துள்ளது. மேலூரை அடுத்த நா.கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டி வருபவர் ரமேஷ் (வயது 40). அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 9ம் வகுப்பு மாணவியை ரமேஷ் தொடர்ந்து நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாணவி தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்ட ரமேஷ் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

நாளடைவில் மாணவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை உணர்ந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தனர். பின்னர் அழுது கொண்டே டிரைவர் ரமேஷ் செய்த கொடுமையை கூறினார்.

பாலியல் பலாத்தாரம்

ஆத்திரமடைந்த மாணவியின் தாய், உடனடியாக மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் பலனில்லாததால், மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் 9ம் வகுப்பு மாணவியை பாலில் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரமேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாலியல் தொல்லை

பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம். மேலும் அவர்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்து கொள்வது குறித்தும், பிரச்சினைகள் வந்தால் அவற்றை சமாளிப்பது குறித்தும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதனையும் மீறி பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web