அதிர்ச்சி! இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல்! உலக சுகாதார அமைப்பு தகவல்!

 
கொரோனா

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3-ம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால், டெல்டாவை போல உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகவில்லை. மேலும், ஓமிக்ரான் வைரஸ் ஒரு சில வாரங்களிலேயே முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது.

அதன் பின்னர் கொரோனா பாதிப்பு நாட்டில் தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது.

வைரஸ் கொரோனா தக்காளி

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறுகையில், “ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் பிஏ.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. முந்தையதைவிட மிகவும் வித்தியாசமாகத் தோன்றினால் அது தனி மாறுபாடு என்று அழைக்கப்படும். நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம்.

ஒமைக்ரான் வைரஸால் உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

எனவே அது பிஏ.4 அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக இருந்தாலும், வைரஸ் தொடரும். அதனால், மக்களும் சமூகங்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று  கூறினார்.

முன்னதாக இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பிஏ 2.75 பரவி இருப்பதை இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், இஸ்ரேல் விஞ்ஞானிகளின் கருத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டவட்டமாக மறுத்திருந்த நிலையில், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web