அதிர்ச்சி! கோவையைத் தொடர்ந்து பொள்ளாச்சியிலும் பெட்ரோல் பாக்கெட் வீச்சு! பாஜக நிர்வாகிகளின் வீடுகளிலும் சேதம்!

 
பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், கோவையைத் தொடர்ந்து பொள்ளாச்சியிலும் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீசப்பட்டு அராஜகம் நடைப்பெற்றுள்ளது. பொள்ளாச்சியில், பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் பாக்கெட்டுகள் வீசியதுடன் பாஜக நிர்வாகிகளின் 2 கார்கள், 2 ஆட்டோக்களை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர். இப்படி பாஜக நிர்வாகிகளின் கார்களையும், ஆட்டோக்களையும் உடைத்து விட்டு சென்றது யார் என காவல்துறையினர் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சியாக பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு, வெடிகுண்டு கலாசாரமும் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களிலும் வெட்டு, குத்து, கொலை, கற்பழிப்பு, கொள்ளை என்று குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பாஜ.க. மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு பெட்ரோல் வீசியதைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பெரும் அரசியல் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரத்தில் உள்ள வி.கே.கே.மேனன் சாலையில் அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் திரியின் தீ அணைந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் அதிர்ச்சி சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வீச்சு பாஜக

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் சிலரின் வீடுகள் அமைந்துள்ளது. அதன்படி பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளிலும் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீசி சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்த 2 கார்கள், 2 ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு, வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குண்டு வீச்சு பாஜக

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் பா.ஜ.க. நிர்வாகிகளை குறிவைத்து வீசப்படுவதால் கோவையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web