அதிர்ச்சி! 60 அடி ஆழத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்! இந்திய வீரர்கள் 7 பேர் பலி!

 
வாகன விபத்து

வாகன விபத்தில் 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கின் துர்டுக் செக்டாரில் உள்ள ஷியோக் ஆற்றின் மீது ராணுவ வாகனம் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 60 அடி ஆழத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

வாகன விபத்து

வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “26 வீரர்கள் கொண்ட ஒரு குழு பார்தாபூரில் உள்ள இடைத்தங்கல் முகாமில் இருந்து ஹனிஃபில் உள்ள முகாமுக்கு சென்று கொண்டிருந்தது.

வாகன விபத்து

அப்போது வாகனம் சாலையில் இருந்து விலகி,  ஷியோக் ஆற்றில் விழுந்தது, இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web