அதிர்ச்சி! சிக்கன், முட்டை விலைகளும் உயர்கிறது! நாமக்கல் மாவட்டத்தில் கொள்முதல் விலை நிர்ணயம்!

 
முட்டை விலை உயர்வு! கல்லா கட்டும் தீபாவளி விற்பனை!

தீப்பெட்டியில் துவங்கி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள், துணி மணிகள், பெட்ரோல், டீசல் விலை, டூ-வீலர், கார், பிஸ்கெட், சாக்லெட், ஷாம்பு என அனைத்துப் பொருட்களுமே விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சிக்கன் மற்றும் முட்டை விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் மிக முக்கியமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே  1000க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன.

சிக்கன் பக்கோடா

இதனால் நாள்தோறும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 5 கோடிக்கும் அதிகமான அளவு முட்டைகள் உற்பத்தியாகின்றது. மொத்த உற்பத்தியில் கேரள மாநிலம், தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தில் பிறப்பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலையை 10 காசுகள் உயர்த்தி, ரூ. 4.80-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் தேவை அதிகரிப்பு, அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக முட்டை விலையில் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கன் கோழி  கறி

அதிகரித்து வரும் மக்களின் தேவைக்காக நுகர்வும் விற்பனையும் சூடுப்பிடுத்துள்ளது. அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், சென்னையில் முட்டை விலை ரூ.5.05 காசுகளாகவும் ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.5 அதிகரித்து ரூ.116-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விரைவில், சிக்கன், முட்டை விலை அதிகரிக்கும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web