அதிர்ச்சி! 17,000யை தாண்டியது தினசரி கொரோனா தொற்று!

 
கொரோனா

மக்களே ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க. தினசரி கொரோனா பாதிப்பு 17,000யைத் தாண்டியது.  இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நோய் தொற்றால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 18,819 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் இதன் எண்ணிக்கை 17,070 ஆக அதிகரித்துள்ளது சுகாதாரத்துறையினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது சுகாதாரத்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகளை கலங்கடிக்க வைத்துள்ளது.  இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,69,234 ஆக பதிவாகி உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா
மேலும் கடந்த ஒரே நாளில் 23 பேர் கொரோனா நோய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,25,139 ஆக பதிவாகி உள்ளது. 14,413 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,28,36,906 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி 1,07,189 பதிவாகியுள்ளது. 

கொரோனா

இந்தியாவில் இதுவரை 1,97,74,71,041 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web