அதிர்ச்சி! 13 ஆயிரத்தை தாண்டியது தினசரி கொரோனா தொற்று!

 
கொரோனா

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்று எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா
தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் தொற்று எண்ணிக்கையை குறைப்பது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,249ஆக இருந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது 13,313 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,44,958 ஆக பதிவாகி உள்ளது.

மேலும் நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை 13 ஆக பதிவாகி இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,24,941 ஆக பதிவாகி உள்ளது. 10,972 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,27,36,027 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 83,990 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தைகளுக்கு கொரோனா

இந்தியாவில் இதுவரை 1,96,62,11,973 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 14,91,941 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web