அதிர்ச்சி! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி

 
அம்பிகா ராவ்

பிரபல நடிகை அம்பிகா ராவ், சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். மலையாள நடிகையும், உதவி இயக்குநருமான அம்பிகா ராவ், ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 58.

அம்பிகா ராவ்

கடந்த 2002-ம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் வெளியான ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக அம்பிகா ராவ் திரையுலகில் நுழைந்தார். கடந்த 10 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் அவர், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்யம்’ மற்றும் ‘தொம்மனும் மக்களும்’ மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘வெள்ளினக்ஷத்திரம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும், திலீப் நடித்த பிளாக்பஸ்டர் ‘மீஷா மாதவன்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, சமீபத்தில் வெளியான ‘அனுராகா காரிக்கின் வெல்லம்’, ‘தமாஷா’ மற்றும் ‘வெல்லம்’ உள்ளிட்ட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அம்பிகா ராவ்

அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த அம்பிகா ராவுக்கு ராகுல், சோஹன் என்ற மகன்கள் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web