அதிர்ச்சி! ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ மீது துப்பாக்கிசூடு! சுயநினைவை இழந்து, ஆபத்தான நிலையில், சிகிச்சை!

 
ஜப்பான் பிரதமர் ஷின் சோ

துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின் சோ, மிகவும் ஆபத்தான கட்டத்தில், சுய நினைவை இழந்து, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உலகம் முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டிற்குப் பின்னர், ஷின் சோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாரா என்கிற மேற்கு ஜப்பான் பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலையத்தின் அருகே மக்கள் முன்பு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உரையாடிக் கொண்டு இருந்தார். திடீரென்று கூட்டத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் மக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். அப்போது ரத்த வெள்ளத்தில் அபே தரையில் சரிந்து கிடந்ததைப் பார்த்து பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஜப்பான் பிரதமர் ஷின் சோ

ஷின் சோ அபேயின் நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அபேக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அபேயின் நிலைமை குறித்தும், ரெயில் நிலையத்தில் அபே மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்தும்  முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் 4 முறை ஜப்பான் நாட்டு பிரதமராக ஷின் சோ அபே பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இனியும் பிரதமர் பதவியில் இருந்து அதற்கான பணிகளை தன்னால் மேற்கொள்ள இயலாது.

ஜப்பான் பிரதமர் ஷின் சோ

எனவே தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கடந்த 2020ம் ஆண்டு ராஜினாமா செய்வதாக ஷின்சோ அபே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷின் சோ அபே மீதான துப்பாக்கிசூடு குறித்து மர்மம் நிலவி வருவதால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர் அபே விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web