அதிர்ச்சி! ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

சித்தி மகன் கற்பழிப்பது, உடற்கல்வி ஆசிரியர் துவங்கி, பள்ளி தலைமையாசிரியர் வரையில் பாலியல் தொல்லைகள் கொடுப்பது, கல்லூரி பேராசிரியையே மாணவிக்கு மயக்கமருந்து கலந்த பழச்சாறு கொடுத்து, பெரிய மனிதர்களுக்கு (?!) விருந்து வைப்பது, வகுப்புத் தோழனே கடத்தி, கட்டி வைத்து கற்பழிப்பது என பெண்கள் மூன்று வயதாக இருந்தாலும், 90 வயதாக இருந்தாலும் இந்த சமூகம் நிம்மதியாக பெண்களை வாழ விடுவதாயில்லை.

ஒரு பக்கம் பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருகின்றன என்று புலம்பும் நாம் தான், அதன் அடிநாதமாய் ஒலிக்கும் ஆண்களின் வக்கர புத்தியை கண்டிக்காமல் இருக்கிறோம். டியூசன் முடித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூர  சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் விபூடி கந்த் என்ற பகுதியில் நேற்று இரவு 18 வயது இளம்பெண் டியூசன் சென்டரில் இருந்து தனது வீட்டிற்கு திரும்ப ஆட்டோ ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது ஆட்டோவின் பாதி வழியில் இன்னொரு நபர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறியுள்ளார். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டுனரும் அதில் ஏறிய பயணியும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சாலையில் குப்பையை வீசுவது போல் வீசிவிட்டு சென்றனர்.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இதில் படுகாயமடைந்த இளம்பெண் விபூடிகந்த் போலீஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுனரையும், பயணியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை

பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக் குறியாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் சட்டங்களை விதித்தும் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. தனி மனித ஒழுக்கம் சரியாக என்றைக்கு கடைபிடிக்கப்படுகிறதோ அன்றே பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web