அதிர்ச்சி! ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் பாலியல் புகாரில் கைது! போலீசார் அதிரடி!

 
ஆஸ்கர் இயக்குநர் பால் ஹக்கீஸ்

ஒரே மேடையில் இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரபல இயக்குநர் பால் ஹக்கீஸ், இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சம்பவம் கனடாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு ‘கிராஷ்’ என்ற படத்திற்கு திரைக் கதை எழுதியவர் பால் ஹக்கீஸ். இவர் கனடா நாட்டை சேர்ந்தவர். இந்த படத்தில் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக  ஆஸ்கர் விருதை ஹக்கீஸ் பெற்றார். 2 ஆஸ்கர் விருதுகளை ஒரே மேடையில் வென்று சாதனை படைத்தவர்கள் வெகு சிலரே. இந்த பட்டியலில் ஹக்கீஸூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹக்கீஸ் இத்தாலி நாட்டில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்ற போது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பால் ஹக்கீசை இத்தாலி போலீசார் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சிறை பிடித்து “வீட்டுக்காவலில்” வைத்துள்ளனர். 

ஆஸ்கர் இயக்குநர் பால் ஹக்கீஸ்

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக்கு பின்னரே ஹக்கிஸை சிறையில் அடைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இத்தாலி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட திரைக்கதை ஆசிரியர் பால் ஹக்கீஸ் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரியா சவுத்ரி இந்த வழக்கு குறித்து கூறும்போது, ‘‘இத்தாலிய சட்டத்தின் கீழ், என்னால் ஆதாரங்களை விவாதிக்க முடியாது. பால் ஹக்கீஸ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிராகரிக்கப்பட்டு விரைவில் அவர் குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். விசாரணை முடிந்த பின்பு அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பால் ஹக்கீஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. 2018 ஆம் ஆண்டு 4 பெண்கள், பால் ஹக்கீஸ் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குற்றம் சுமத்திய 4 பெண்களில் 2 பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஆஸ்கர் இயக்குநர் பால் ஹக்கீஸ்

அதன் பிறகு  தன்னை மிரட்டி 9 மில்லியன் டாலரை  பறிக்க முயன்றனர் என்றும் அதிரடியாக குற்றம் சாட்டி அனைவரையும் அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மீண்டும் ஒரு பாலியல் வழக்கில் பால் ஹக்கீஸ் நட்சத்திர ஓட்டல் அறையில் வீட்டுச் சிறையில் இருப்பது கனடா மக்களையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இத்தாலி நாட்டு சட்டப்படி அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்தும் சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web