அதிர்ச்சி! அதிவேகமாக பரவும்! சீனாவில் இரண்டு புதிய வகை ஒமைக்ரான் மாறுபாடுகள்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

 
ஓமைக்ரான் பரவல்- ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு WHO எச்சரிக்கை..!!

சீனாவில் மேலும் இரண்டு புதிய வகை ஒமைக்ரான் மாறுபாடுகள் உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. 

கொரோனா தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் நிபா வைரஸ்

வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இந்த கொரோனா வைரஸ் பரவலுக்குத் தப்பவில்லை. இந்நிலையில், மிக வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரசின் மாறுபாடு அடைந்த 2 புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசின் 'பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7' வகை மாறுபாடுகள் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டவை. சீனாவின் ஷாவோகுவான் மற்றும் யாண்டாய் நகரங்களில் இந்த பிஎப்.7 வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 

குவாங்டாங் மாகாணத்தின் ஷாகுவான் நகரில் பிஏ.5.1.7 கண்டறியப்பட்டுள்ளது.  'பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7' வகை மாறுபாடுகள் மிகவும் எளிதாக தொற்றும் தன்மை கொண்டவை. முந்தைய நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் உடைத்துக் கொண்டு பரவும் வீரியமிக்கவை. இதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட பிஎப்.7 வகை மாறுபாடு மக்களைப் பாதிக்கலாம். 

அதிர்ச்சி!! கேரளாவில் 13 பேருக்கு நோரோ வைரஸ்!!

அதே வேளையில், கொரோனா தடுப்பூசிகள், கடுமையான நோய் பாதிப்பு ஏற்படாமலும் மற்றும் வைரஸால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதும் பிஎப்.7 வகை மாறுபாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை மாறுபாடு பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web