பேரதிர்ச்சி! இந்தியாவில் 1,00,000யைத் தாண்டியது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை!

 
கொரோனா

கொஞ்சம் நாட்களாக கொரோனா தொற்று பயமில்லாமல் நிம்மதியாக இருந்த பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது. இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதும் சில சமயங்களில் குறைவதுமாக இருந்து வருகிறது.

இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி சென்று விட்டது. இதனால் சுகாதாரத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

கொரோனா

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 17,092 ஆக பதிவாகி உள்ளது. மேலும் நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆக பதிவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5,25,168 ஆக பதிவாகி உள்ளது. 14,684 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,51,590 ஆக பதிவாகி உள்ளது. 
இந்தியா முழுவதிலும் தற்போது மருத்துவமனையில் 1,09,568 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா

இந்தியாவில் இதுவரை 1,97,84,80,015கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 9,09,726 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web