அதிர்ச்சி! ஒரே வாரத்தில் மூன்று பாடகர்கள் மரணம்!!

 
ஷீல் ஷாகர்

மேடையில் பாடிக் கொண்டிருந்த போதே உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கிருஷ்ணகுமார் குன்னத் உயிரிழந்தது பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ரசிகர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது பிரபல  பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் ரசிகர்களும், திரையுலகமும் மீளவில்லை.

அதற்குள் டெல்லியைச் சேர்ந்த பாடகர் இறந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ல்லியை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான ஷீல் சாகர் நேற்று காலமானார். அவருக்கு வயது 22. அவரது மரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை நண்பர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 

ஷீல் ஷாகர்

இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவரது இசையில் வெளியான முதல் பாடலான ‘நான் முயன்றால்’ பாடல் பலரது பாரட்டுகளை பெற்றது. அவர் கடந்த ஆண்டு மட்டும் மூன்று தனிப்பாடல்களை வெளியிட்டார்.

அவற்றில் 'பிஃபோர் இட் கோஸ்', 'ஸ்டில்' மற்றும் 'மிஸ்டர் மொபைல் மேன் - லைவ்' ஆகியவை அடங்கும். குருகிராமில் உள்ள தி பியானோ மேன் ஜாஸ் கிளப்பில் அவரது நிகழ்ச்சியின் போது ‘மிஸ்டர் மொபைல் மேன்’ பாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டது. ஷீல் சாகர் தனது பாடும் திறமைக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.

rip

சாகர் தனது முதல் சிங்கிள் இஃப் ஐ டிரைட் மூலம் இண்டி இசைக் காட்சியில் முக்கியத்துவம் பெற்றார். அவரது பாடல் ஸ்பாட்டிஃபை இயங்குதளத்தில்  மட்டும் 40 ஆயிரம் ஸ்ட்ரீம்களைக் குவித்துள்ளது.இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் பல்வேறு விதமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web