அதிர்ச்சி!! 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!! பரபரக்கும் தமிழகம்!!

 
என்ஐஏ என்ஐஏ

தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்களும், ரகசிய தகவல்களும் கிடைத்து வந்தன. இதன் அடிப்படையில் தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சென்னை, மயிலாடுதுறை உட்பட  8 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தீவிரவாத அமைப்பான ஐஎஸ்சுக்கு ஆதரவாக நிதி திரட்டப்படுவதாக டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது தமிழகத்தில் 8 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ஐஏ

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இங்கு இருந்து கொண்டே சிலர் அவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டியது சம்பந்தப்பட்ட வழக்கு ஏற்கனவே டெல்லியில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் தான் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ஐஏ

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் சென்னை மண்ணடியில் சாதிக் என்பவர், என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சாதிக் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மண்ணடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதுவரை என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இதைத்தொடர்ந்து இன்னும் சில இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎஸ்  தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியவர்கள் குறித்த பட்டியல் ஒன்று தேசிய புலனாய்வு முகமையிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை