குமுதம் பத்திரிகை ஆசிரியர் மரணம்!! முதல்வர் இரங்கல்!!
தமிழின் வார நாளிதழ்களில் பிரபல பத்திரிகையான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் . இவருக்கு வயது 56. இவர் இன்று திடீரென சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவர் குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தான் இவரது சொந்த ஊர் . அவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குமுதம் வார இதழில் தமது 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கியவர். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான நாவல்களை எழுதிக் குவித்தவர் . குமுதத்தில் பல தொடர்களை நீண்டகாலம் எழுதி வருபவர். ஆன்மீக துறையில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. தனி முத்திரை பதித்து திகழ்ந்த ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக பிரமுகர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது..

.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
