அதிர்ச்சி!! ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 31 பேருக்கு கொரோனா!!

 
கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த பட்டியலில்  தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை கடிதம் மூலம் சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

ராஜீவ்காந்தி பண்பாட்டு மையம்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும், அவைகளை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பயிலும் மாணவர்களில் சிலருக்கு கடந்த வாரத்தில்  ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறையினர், அங்கு தங்கி பயிலும் மற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொண்டனர்.

கொரோனா

இதில், 21 மாணவிகள், 8 மாணவர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web