அதிர்ச்சி!! ஒரே நேரத்தில் முதல்வர் மற்றும் கவர்னருக்கு கொரோனா!!பீதியில் பொதுமக்கள்!!

 
மகாராஷ்டிரா முதல்வர் கவர்னர்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கைந் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருந்த போதிலும் பாதிப்புகள் பெருகத் தொடங்கியுள்ளது பெரும் கவலையை அளிப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
ஏற்கனவே மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் அபாயத்தில் இருந்து வருகிறது. . இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம். சட்டசபை கலைப்புக்கு பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்நாத் விடுத்த செய்திக்குறிப்பில் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசி மூலம்  பேசினேன் . கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அமைச்சரவை கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் உத்தவ் தாக்கரே நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்  இன்று காலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, கொரோனா பாதிப்பால் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web