அதிர்ச்சி தந்த 10ம் வகுப்பு ரிசல்ட்! தந்தை பாஸ்.. மகன் பெயில்!

 
தந்தை மகன்

இன்று நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் எழுதியது தெரிய வந்துள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் தந்தை வெற்றி பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். மகன் தோல்வியுற்றுள்ளார். மகாராஷ்டிராவில் ஆச்சரிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வை ஒன்றாக எழுதிய தந்தை மற்றும் மகன் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருந்த நிலையில், மகன் தோல்வி அடைந்து, தந்தை வெற்றி பெற்றுள்ள சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மார்ச் 15ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை புனேவை சேர்ந்த பாஸ்கர் வேக்மர் என்பவர் எழுதி இருக்கிறார். இவரின் குடும்ப வறுமை காரணமாக தனது பள்ளிப்படிப்பை 7 வது வகுப்போடு நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இவருக்கு வயது 43. இருப்பினும் இவர் கல்வி மீதான ஆர்வம் குறையவில்லை. வயது என்பது வெறும் எண் என்பதை பாஸ்கர் தற்போது நிரூபித்துக் காட்டி உள்ளார்.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி
இந்நிலையில் தனது மகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத தயாராகிக் கொண்டிருந்ததை பார்த்த பாஸ்கருக்கு தன்னுடைய படிப்பு வேட்கை மீண்டும் துளிர் விட்டுள்ளது. எனவே தானும் 10ம் வகுப்பில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று அயராது படித்துள்ளார்.

தேர்வு
இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், முடிவில் 43 வயதான தந்தை பாஸ்கர் வெற்றிகரமாக தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஆனால் அவரது, மகனோ தோல்வி அடைந்து விட்டார் என்பது வேதனை அளிக்கிறது. இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விட்டுப்போன படிப்பை தற்போது வெற்றிகரமாக முடித்த பாஸ்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web