அதிர்ச்சி வீடியோ!! குட்டியானையை அடித்து விரட்டும் இளைஞர்கள்!!

 
குட்டி யானை

அஸ்ஸாம் மாநிலத்தில் ஹோஜாய் மாவட்டம் லங்கா நகர் ஹல்பகன் பகுதியில் ஒரு குட்டியானை ஒன்று தாயை பிரிந்த நிலையில் தனியாக நின்றது. அக்டோபர்  12ம் தேதி அந்த பக்கம் வழிதவறி  தனியே தவித்து நின்ற குட்டி யானையை அப்பகுதி மக்கள் விரட்டி விரட்டி துன்புறுத்தியுள்ளனர். தாயைப் பிரிந்து குட்டி யானை கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.


இதன்  வாலைப் பிடித்து இழுத்தும், மனிதமே இல்லாமல் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த செயலை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் தன்னை துன்புறுத்துபவர்களிடம் தப்பித்து தன் உயிரைக் காத்துக் கொள்ள தன்  பிஞ்சு கால்களுடன் அங்கும், இங்கும் ஓடியது. காண்பவர்கள் கண்களில் நீரை வரவழைக்கும் இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையால் மட்டுமே இதே போல் குற்றச்செயல் புரிபவர்களை கட்டுப்படுத்த முடியும் என  சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web