இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சைனஸ் அறுவை சிகிச்சை!!

 
போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சைனஸ் தொந்தரவு காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால், அவருக்கு லண்டனில் உள்ள நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அரசு மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை நடந்ததாக் தெரிவிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் அவருடன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் உடன் இருந்தார்.

போரிஸ் ஜான்சன்

இந்த சிகிச்சைக்காக அவர் நேற்று காலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு சென்றதாகவும், மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்ததும் காலை 10 மணிக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பியதாகவும் அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மேக்ஸ் பிளெய்ன் கூறினார்.

இந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் இப்போது நலமாக இருப்பதாகவும், வீட்டில் ஓய்வெடுப்பதாகவும், திட்டமிட்டபடி இன்று (ஜூன் 21) காலை அமைச்சரவை கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு வார இறுதியில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளார். இந்த மாத இறுதியில் ஜி7 நாடுகள் கூட்டத்திலும் நேட்டோ உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.58 வயதான பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web