ஐயா... ரோட்ட காணோம்.. கேமராவப் பாத்து கண்டுபுடிங்க! போலீசாரை அதிர வைத்த புகார்!

 
ரோட்ட காணோம்

 

போலீஸ் நிலையம் சென்ற ஒருவர், சென்னை கொரட்டூரில் தொலைந்து போன சாலையை கண்டுபிடித்து தரும்படி விசித்திரமான புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரட்டூர் போலீஸ் நிலையத்திற்கு  சிவலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் குமார் (வயது 54) என்பவர் வினோதமாக புகார் மனுவை ஒன்றை அளித்தார். இதை பார்த்த போலீசாரின் தலைசுற்றி போயுள்ளனர்.

 போலீஸ்

அதில், ‘‘நான் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூரில் உள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலைகள் குறித்த தகவல்களை கோரியிருந்தேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் அம்பத்தூர் செயற்பொறியாளர் அனுப்பியிருந்த தகவல்களை கண்ட எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், மனுவில் கோரியிருந்த அந்த குறிப்பிட்ட சாலைகள் கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்டு விட்டதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து வந்த பதிலில், போடாத சாலையை போட்டதாக கூறியிருக்கிறார்கள். இதனால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைகாணாமல் போன அந்த சாலையை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

ப்ரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்

இந்த புகாரால் அதிர்ந்த போன போலீசார், இதுபற்றி மாநகராட்சியிடம்தான் தாங்கள் கேட்க வேண்டும் என்று கூறி குமாரை நைசாக பேசி திருப்பி அனுப்பி வைத்தனர்.இதை பார்க்கும் போது வடிவேல் நடிப்பில் ‘கண்ணும் கண்ணும்’ திரைப்படத்தில் வெளியான நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது. குமாரின் புகார் குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் என்ன பதில் வரும் என்று சமூக ஆர்வலர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web