தவறி விழுந்து படுகாயம்! எலும்பு முறிவு! லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

 
லாலு

ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது வீட்டின் மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கி வரும் போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். வலது தோள் பட்டையில் எலும்பு முறிவுடன் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு முன்னர் மாட்டுத்தீவனத்தில் முறைகேடு செய்ததாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலத்தின் போது சிறையில் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற லல்லு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கோரிய மனுவை ஏற்ற நீதிமன்றம் அவரை கடந்த மாதம் ஜாமீனில் சிறையில் இருந்து விடுவித்தது.

லாலு பிரசாத் யாதவ்

இந்நிலையில் வீட்டில் இருந்த லாலு பிசாத் யாதவ் நேற்று முன்தினம் துரதிருஷ்டவசமாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வயது மூப்பு காரணமாகவும் அவருக்கு பல்வேறு உடல்நலக்கோளாறுகள் இருந்து வருகிறது. இது குறித்த தகவல் கிடைத்த மருத்துவர்கள் லாலுபிரசாத் வீட்டிற்கு விரைந்தனர். அவருக்கு அங்கேயே வைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று அதிகாலை லல்லுபிரசாத் யாதவ் மீண்டும் வலியால் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு லாலு பிரசாத் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது முழு உடல்நிலையையும் மருத்துவர்கள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவரின் வெளிநாடு பயணம் குறித்தும் மருத்துவர்களால் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web