சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதி!!

 
சோனியாகாந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜூன் 2ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  காய்ச்சல், சளியால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சோனியா காந்தி பூரண நலம் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சமூகவலைதளங்களில் கூறி வந்தனர்.

சோனியா

பின்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சி  வட்டாரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, ‘‘காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராகவே இருக்கிறது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

வைரஸ் கொரோனா தக்காளி

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வரும் சூழ்நிலையில் அக்கட்சித் தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கட்சிப்பணி தொய்வு அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் சிலர் முணுமுணுத்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web