தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பெரும் பாதிப்புக்கள் உருவாகின. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வந்தன. முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல், சுகாதார தூய்மை என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. குறிப்பாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தமிழகம் முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தடுப்பூசி

அத்துடன் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மே மாதத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 
ஆனால் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.

தடுப்பூசி

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்களை கடைப்பிடிக்கவும், இதனை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்யவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் ஒரு கட்டமாக தற்போது தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூன்  12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என  சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்திக் கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web