இலங்கை அதிபர் ராஜினாமா!! நீடிக்கும் பதட்டநிலை!!

 
கோத்தபய ராஜினாமா

கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பசி, பட்டினி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

இதன் விளைவாக கொதித்தெழுந்த பொது மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்  அரசு மாளிகைகளை கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகி வருகின்றனர். இருப்பினும் மக்களின் பொருளாதார பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இலங்கை போராட்டம்

இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜப«க்சே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தான் தங்கியிருந்த அதிபர் மாளிகையில் இருந்தும் கோத்தபய ராஜபக்சே தப்பியோடிவிட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு இருக்கிறார்? யாரிடம் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் என்ன செய்வதென்று அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web