விக்னேஷ் இயக்கத்தில் ஸ்டாலின்!! கலக்கும் தமிழக முதல்வர்!!

 
விக்னேஷ்சிவன்

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு விளம்பர படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்துள்ள செய்தி பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜூலை  28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலியம்பியாட் போட்டி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான 14 விழிப்புணர்வு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செஸ்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரப் படம் ஒன்று தயாராக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் விளம்பர படத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விளம்பரப் படத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் பெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற உள்ளன. அந்த படப்பிப்பு நேப்பியர் பாலத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இதனால் நேப்பியர் பாலத்தில் சில மணி நேரங்கள் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

செஸ் ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான  தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில், அதிலும் தமிழகத்தின் புராதன சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web