மாணவர்களே இதை நம்பாதீங்க!! அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை!!

 
அண்ணா பல்கலை கழகம்

தமிழகத்தில் +2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளுக்கு கல்லூரிகளில் அட்மிஷன் தேடி அலையத் தொடங்கி விட்டனர் . இவர்களை குறிவைத்து மர்ம கும்பல்கள் போலியான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்த கல்லூரியில் இடம் , சீட், முன்பணம், முன்பதிவு என்பது போன்ற பல வாசகங்கள் சமீபமாக இடம்பெற்று வருகின்றன. 

ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

அந்த வரிசையில் ண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டு பலருக்கும் இமெயில்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலைக் கழகத்தில் முன்பதிவிற்கும் , சீட்டிற்கும், விண்ணப்பங்கள் பெறவும் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் அறிவிப்புக்களை பார்வையிடலாம். மற்றபடி வரும் அனைத்து கவர்ச்சிகரமான விளம்பரங்களும் போலியானவை.

கல்லூரி மாணவிகள்

பெற்றோர்களும், மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் இலவசமாக படிக்கலாம் எனப் பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இமெயில் அனுப்பட்டு வருகின்றன. அந்த இ- மெயில்கள் போலியானவை. இந்த இமெயில்கள் குறிப்பாக என்.ஆர்.ஐ மாணவர்களை குறிவைத்து அனுப்பட்டு வருவதாக விசாரணையில் தெளிவாகியுள்ளது.  மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து  தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுகவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இமெயில்கள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை