மாணவர்களின் மடியில் மாணவிகள்!! நூதனப் போராட்டம்!! அதிர வைக்கும் பிண்ணனி!!

 
மாணவர்கள்


ஆண், பெண் சமத்துவம் என்பதெல்லாம் வெறும் வாய்வழியாகவே இருந்துவிடக் கூடாது என்பதை கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் நேற்று நிரூபித்துக் காட்டி உள்ளனர். மாணவ, மாணவிகள் ஒருவர் மடி மீது ஒருவர் அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கேரள மாணவர்கள் எப்போதும் சமூக வலைதளங்கள் மற்றும் கல்வியில் முன்னிலை வகிப்பது வழக்கம். இந்நிலையில் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் புதுப்புது அழுத்தங்களையும் சந்தித்து வருவது துரதிருஷ்டமாக அமைந்துவிடுகிறது. இவற்றை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் எடுக்கும் புதுப்புது முயற்சிகள் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்து வரவேற்பை பெற்று விடுகிறது.

மாணவிகள்

திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் சிஇடி (கல்லூரி ஆப் இன்ஜினியரிங் திருவனந்தபுரம்) மாணவ-& மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் அருகருகே அமர்ந்து அரட்டை அடிப்பது வாடிக்கையான விஷயம். இதை நோட்டமிட்ட சில சமூக விரோதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை அருகருகே போடப்பட்டிருந்த இருக்கைகளை பெயர்த்து 3 நாற்காலிகளை மட்டுமே விட்டுவைத்தனர். இதன் மூலம் மாணவ, மாணவிகள் அருகருகே உட்கார முடியாமல் போய்விடும் என்று மனக்கணக்கு போட்டுள்ளனர்.ஆனால் இதை மிகவும் சாமர்த்தியமாக மாணவ, மாணவிகள் சமாளித்துள்ள சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 அதன்படி சிஇடி கல்லூரியின் 2ம் ஆண்டு மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி உள்ளனர்.இது குறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது அருகருகே நாங்கள் உட்கார்ந்து இருக்கக் கூடாது என்று செய்யப்பட்ட சதியை நாங்கள் முறியடித்து விட்டோம் என்று கூறினர்.இதற்கிடையில், கேரளாவில் செயல்பட்டு வரும் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகள் வருகிற கல்வியாண்டு முதல் இருபாலர் பள்ளிகளாக மாற்றி அமைக்கப்படும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web