இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்!! அமைச்சர் எச்சரிக்கை!!

 
கொரோனா

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினமும் 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் சென்னையில் மட்டும் 497 பேருர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், நேற்று யாரும் கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை.

கொரோனா வார்டு

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,063 நபர்களுக்கு தொற்று பாதித்துள்ளது. 92 சதவீதம் நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா

தற்போது தொற்று அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. தொற்று பாதித்தவர்கள் 6 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மீண்டும் நெகட்டிவ் வந்து விடுகிறது. பிஎ4, பிஎ5 உள்ளிட்ட வகைகளில் வைரஸ் பரவி வருகிறது. இந்த தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மேலும், பள்ளிக் குழந்தைகள், சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள்ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web