அசத்தல்! சென்னையில் புதிய ரன் வே! 1 மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க முடிவு!

 
விமானம் விமான நிலையம்

சென்னை விமான நிலைய பயணிகளின் வசதிக்கேற்ப அதிநவீனப்படுத்தி, கால விரயத்தை குறைக்கும் வகையிலான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு தற்போது 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதை தற்போது 50 விமானங்களாக உயர்த்துவது குறித்து விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் 2 (ரன்வே) ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருன்றன. விமானங்கள் பயணத்தின் போது வேகமாக புறப்படவும், இறங்கவும் டாக்சி வே மாற்றி அமைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் 2 ரன்வேக்களில், முதல் ரன்வே 3.66 கிமீட்டராகவும், மேலும் 2வது ரன்வே 2.89 கிமீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு தரையிறங்கி, புறப்பட்டு செல்கின்றன. 2வது ரன்வேயில் 76 பயணிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஏடிஆர் எனும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒரே நேரத்தில் 2 ரன்வேக்களையும் இயக்க விமான நிலைய நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல் ரன்வே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன் கோபுரங்கள், உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள் அமைந்துள்ளதால், அதிகளவில் இருப்பதால் 2வது ரன்வே அதிகளவில் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. முதல்ரன்வேயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வேளைகளில் மட்டுமே 2வது ரன்வே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடிய விரைவில் 2 ரன்வேக்களையும் ஒரே நேரத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான நிலத்தை அரசு கையகப்படுடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்கள்.

விமானம் விமான நிலையம்

முதலாவது ரன்வேயில் தற்போது ஒரு மணிநேரத்திற்கு 30 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும் சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் விமான சேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளனர். கூடுதலாக அமைக்கப்பட உள்ள டாக்சிவே எனும் இணைப்பு பாதை மூலம் விமானங்கள் ஓடு பாதையில் இருந்து, மற்றொரு ஓடுபாதைக்கு வேகமாக செல்ல வசதியாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்தின் அதிநவீன மாற்றங்களால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web