மாணவிகள் ரூ.1,000 திட்டத்தில் திடீர் குழப்பம்! விண்ணப்பிப்பதில் புது சிக்கல்!

 
பணம் ரூபாய் சம்பளம்

ரூ.1000 பெற விண்ணப்பிப்பதில் மாணவிகளுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது அதிருப்தியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. 

பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணம்! அரசு அதிரடி அறிவிப்பு!

இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க தொடங்கியதால் சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். 

ஸ்டாலின் பணம்

கல்லூரிகளில் சர்வர் டவுனாக உள்ளது அல்லது ஆள் இல்லை என கூறி வெளியில் பதிவு செய்ய கூறுவதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web