சூப்பர்!! தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி!!அதிரடி உத்தரவு!!

 
புத்தக கண்காட்சி

தமிழகத்தில்  பல மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது . அதில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் இந்த புத்தக கண்காட்சியை காணவும்,புத்தகங்களை காணவும் லட்சக்கணக்கில் வாசகர்கள் கூடுவர். 

புத்தக கண்காட்சி book fair
சென்னையைப்  போன்று தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில்  மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர்  மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சமும்  வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கு மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவசம்!! ஜனவரி 6 முதல் சென்னையில் புத்தக கண்காட்சி!!

இந்தக் குழுவில் நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்கள். அதே போல், மாவட்ட அளவில் கண்காட்சிகளை நடத்த மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு  உருவாக்கப்படும். இந்த குழுவில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், வாசகர்கள், பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web