சூப்பர்!! இன்று முதலீட்டாளர்கள் மாநாடு!! 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!!

 
முதலீட்டாளர்கள் மாநாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசு

மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது என்றும் தமிழ்நாட்டில் ஓராண்டு காலத்தில் தொழிற்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 

உலகளவில் திறன் மேம்பாட்டில் தமிழகம் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது என்றும், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய உள்ளது என்றும், தென்தமிழகத்தில் ரூ.16,709 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக முதலீடுகள் செய்கின்றனர் என்றும், ஓராண்டில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் நிறுவனங்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன என்றும், இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் 78 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. வட தமிழகத்தில் ரூ.5,300 கோடி முதலீடும், மத்திய தமிழகத்தில் ரூ.285 கோடி முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் ரூ.16,750 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web