சூப்பர்!! 2 ஆண்டுகளில் இந்தியாவில் சுங்கச்சாவடிகளே இருக்காது!! அமைச்சர் அதிரடி!!!

 
விகேசிங்

இந்தியா முழுவதும் பல பகுதிகளில் ஜிபிஎஸ்  முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் மீதமுள்ள பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இதன் பிறகு அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் வேலூரில் நடத்தப்பட்டு வருகிறது.

8 வழிச்சாலை

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு  வி.கே.சிங் இச்செய்தியை வெளியிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி மூலம் பயண தூரத்திற்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை 2 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும், விரைவில்  நாட்டில் சுங்கச்சாவடிகளே இல்லை என்ற நிலையும்  உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

விகேசிங்

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான நிலம் இல்லை என்றால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது .  8 வழிச்சாலை திட்டத்திற்கு 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.  மக்களுக்கு பிரச்சனை உருவாகும் பட்சத்தில் இத்திட்டம் முழுவதுமாக கைவிடப்படும் எனவும்  அமைச்சர் வி.கே.சிங் உறுதி அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web