சூப்பர்! தீயணைப்பு பணியில் களமிறங்கிய ரோபோக்கள்!

 
தீயணைப்பு துறையில் ரோபோக்கள்

டெல்லி தீயணைப்புத்துறையில் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள ரிமோட் கன்ட்ரோல் ரோபோக்கள் அதிரடியாக செயல்பட்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரோபோக்கள் என்றால் கடை வாசலில் நின்று வணக்கம் சொல்வது, தொழிற்சாலைகளில் பணி செய்வது என்றுதானே இதுவரை நாம் பார்த்து இருக்கிறோம். டெல்லியில் மனித உயிர்களை காக்கும் தீயணைப்பு துறையில் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள செய்தி தொழில்நுட்பத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீயணைப்பு துறையில் ரோபோக்கள்

டெல்லியில் உள்ள சமய்புர் பத்லி என்ற இடத்தில் நேற்று அதிகாலை 2.18 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரோபோ உதவியுடன் முதன் முறையாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த புதிய முயற்சியால் வீரர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல், தீ கட்டுக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் குறைந்த நேரத்திலேயே தீ கட்டுக்குள் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த புதிய முயற்சியில் கிடைத்த வெற்றி  குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘ரிமோட்-கண்ட்ரோல்ட் தீயணைப்பு ரோபோக்களை எங்கள் அரசாங்கம் புதிதாக வாங்கியுள்ளது. இவற்றின் மூலம் அதிகபட்சமாக 100 மீட்டர் தூரம் வரை சென்று தீயை எளிதாக குறைந்த நேரத்தில் அணைத்துவிட முடியும். துரிதமாக தீ அணைக்கப்பட்டுவிடும் பட்சத்தில் பொருட்சேதத்தை குறைக்கவும் மற்றும் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றவும் முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தீயணைப்பு துறையில் ரோபோக்கள்

குறுகிய பாதைகளில் தீயணைப்பு வீரர்களும் வாகனங்களும் செல்ல முடியாத பட்சத்தில், இந்த ரிமோட் கண்ட்ரோல் தீயணைப்பு ரோபோக்கள் எளிதாக சென்று மிகவும் ஆபத்தான பணிகளையும் செய்ய கூடியது. 1 நிமிடத்திற்கு 2,400 லிட்டர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் 140 குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்தைக் இந்த ரோபோக்கள் கொண்டுள்ளது. இந்த ரோபோக்களில் சென்சார் மற்றும் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் களப்பணியை நேரில் சென்று ஆராயத் தேவை இருக்காது. மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரோபாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சோதனை முயற்சியில் களம் இறக்கப்பட்ட இந்த ரோபோக்கள் விரைவில் தீயணைப்புத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரிதமாக செயல்பட்டு  மனித உயிர்களை காப்பாற்றும் ரிமோட் ரோபோக்களை டெல்லி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web