சூப்பர்!! முதன் முறையாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனிபருவ இதழ்கள்!!

 
பருவ இதழ்கள்

தமிழகத்தில் மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிக்கவும்,  அவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் படைப்புத் திறன்களை வெளிப்படுத்தவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மானிய கோரிக்கையில் அறிவித்திருந்தார். அதனை செயலாக்கும் வகையில் தற்போது  அரசுப்பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்பட உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை

அத்துடன் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும், சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் “கனவு ஆசிரியர்” என்ற இதழ் மாதம் ஒரு முறை வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்”, உயர் வகுப்பு மாணவர்களுக்கு “தேன் சிட்டு” இதழ், ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” இதழை வெளியிட  பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த இதழ்களில் தேசிய மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகள்,   மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்புத் திறன்கள்  இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை
இதனை ஏட்டளவில் மட்டுமின்றி  வகுப்பறைச் சூழலுடன் நயம்பட இணைக்கப்படும். மாணவர்களிடையே  வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வகையில் செயலாக்கப்படும். அத்துடன் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உட்பட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிக்கொணர போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும். இதுமட்டுமன்றி ஆசிரியர்களுக்காக தனித்துவமான படைப்புத் தளத்தை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web