சூப்பர்!! கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் !! தமிழக அரசு உடனடி உத்தரவு!!!

 
மாற்றுத்திறனாளிகள்


தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும் முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தகவல்களை பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில்  அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். இதனுடன் திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதையும் கோவில் நிர்வாகங்கள்  உறுதி செய்ய வேண்டும்.

முதியவர்கள்
திருக்கோயில்களில் இதற்காக தனியாக ஒரு பணியாளர் பொறுப்பில் அமர்த்தப்பட வேண்டும். சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வுதளங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை உடனடியாக  செயல்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதுநிலை திருக்கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web