சூப்பர்!! ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் 110 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு!!

 
ராகுல்

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் ராகுல் இவருக்கு வயது  11 . இவன்  நேற்று முன்தினம் பிற்பகல்  2 மணிக்கு குடியிருக்கும்  வீட்டிற்கு பின்புறம் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். உடனே கூச்சலிட்ட  சிறுவனின் அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ராகுல்

 உடனடியாக தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு குழுவினர் 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் 40 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

ராகுல்

ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய்க்குள் ஆக்சிஜனை அனுப்பி வருகின்றனர்.  சிறுவனுக்கு ஜூஸ், பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள் சிறிய வாளியின் மூலமும் கொடுக்கப்பட்டு வருகிறது. சிறுவன் தைரியத்துடன் இருந்து வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கிணற்றுக்குள் சிறுவன் இருக்கும் பகுதியில் தொடர்ந்து நீர் சுரந்துகொண்டே இருக்கிறது. சிறிய வாளியின் மூலம் தண்ணீரை சிறுவன் சேகரித்து மேலே அனுப்பும் காட்சிகள் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது.  மீட்பு ரோபோ ஒன்றும் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 2  மணி நேரத்தில் சிறுவனை உயிருடன் மீட்டுவிடலாம் என்ற மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web