சூப்பர்!! விரைவில் ரேஷன் கடைகளில் வைபை வசதி!!! அதிரடி அறிவிப்பு!!

 
ரேஷன்


தமிழகத்தில் சலுகை விலையில் பொருட்கள் நடுத்தர மக்களுக்கு  ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் மத்திய , மாநில அரசின் நலத்திட்டங்கள் ,நிவாரண மற்றும் நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் மேம்படுத்தவும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இ.சேவை மையம்

அதன்படி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. 

தமிழகம் முழுவதும் மொத்தமாக 35000 ரேஷன் கடைகள் உள்ளன. அவை, கார்டுதாரர்களின் முகவரிக்கு உட்பட்ட, 2 கி.மீ., துாரத்திற்குள் அமைந்துள்ளன. பி.எம்.வாணி திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரேஷன்

இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில், ரேஷன் கடைகளில், 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்பவர்களுக்கு  இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. அங்கு மொபைல் போன், 'லேப்டாப்' எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதள சேவை பயன்படுத்துபவர்கள்  ஒவ்வொரு மாதமும்  குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். சொந்த கட்டடங்களில் இடவசதி அதிகமிருக்கும் ரேஷன் கடைகளில், இத்திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவுத் துறை ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web