ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு!! குழப்பத்தில் மாணவிகள்!!

 
ஹிஜாப்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து  மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில்  மாநில அரசு  பிப்ரவரி 5ம் தேதி ஹிஜாப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனை  எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரி  மாணவிகள்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கல்லூரி மாணவிகள் ஹிஜாப்

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை எனவும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் நடைபெற்றது. அவா்களின் மனுக்கள் மீதான வாதப் பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று வெளியிட்டது.

ஹிஜாப் பர்தா

அதில் இரு வேறு தீர்ப்புகளை வழங்கப்பட்டதுடன் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது எனவும் அறிவித்தது. பள்ளி, கல்லூரிகளில்  ஹிஜாப் அணிவது தனிப்பட்ட விருப்பமே தவிர வேறு எதுவும் இல்லை. மாணவிகளுக்கு கல்வி அளிப்பதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு வேறு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டதால் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web