குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ‘குட்டி காவலர்’ திட்டத்தை காணொளி காட்சி மூலமாக துவங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுடன் இணைந்து கோயம்புத்தூர் உயிர் அறக்கட்டளை அமைப்பு ‘குட்டி காவலர்’ என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.


கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்தவாறே பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, உயிர் அறக்கட்டளை தலைவர் சஞ்ஜய் ஜெயவர்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், அறங்காவலர் ஜி. சவுந்தரராஜன், புரவலர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின்

'தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம்' என சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் வாசிக்க, பள்ளி மாணவர்கள் அந்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்தபடியே உறுதிமொழியேற்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!