உலக சாம்பியனை வீழ்த்திய இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்! தமிழக வீரர் சாதனை!

 
குகேஷ்

 இந்தியாவின் தற்போதைய  கிராண்ட் மாஸ்டராக இருந்து வருபவர் குகேஷ். இவருக்கு வயது 16.  இவர் எய்ம்செஸ் ரேபிட் போட்டியில் உலகின் நம்பர்1 செஸ் சாம்பியனான கார்ல்சனை 9வது சுற்றில் தோற்கடித்துள்ளார். இது  வரலாற்று சாதனையாக கொள்ளப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளார் குகேஷ். 

குகேஷ்

இந்தியாவின் 16வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியனான கார்ல்சனை தோற்கடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளும்,  வாழ்த்துகளும்  குவிந்து வருகின்றன. இதற்கு முன்னர் நேற்று நடைபெற்ற 5வது சுற்று போட்டியில் இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி உலக சாம்பியனான கார்ல்சனை 5வது சுற்று போட்டியில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ்

இந்திய செஸ் வீரர்கள் இமாலய சாதனை புரிந்து வருவது விளையாட்டுத் துறையில் புதிய ரத்தம் பாய்ச்சியுள்ளதை உறுதிப்படுத்துகிறது. இதைத்தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web